சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு

தொடர்ந்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மிது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

Update: 2024-03-29 10:02 GMT

டாஸ்மாக்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் உத்தரவின்படி மதுரை தெற்கு மாவட்ட மேலாளர் மு.செய்யது முகம்மது மற்றும் திருமங்கலம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் ஆர்.மரியபாக்கியம் ஆகியோர் தலைமையில் டாஸ்மாக் உதவி மேலாளர் மற்றும் மதுவிலக்கு போலீசார் கள்ளிக்குடி தாலுகா பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டதில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பெரியஉலகாணி ஊரைச் சேர்ந்த முத்து, பரமேஸ்வரி, குருநாதன் மற்றும் கூடக்கோவில் ஊரைச் சேர்ந்த கருப்பையா, ஜெகலாதபிரதாபன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து, வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களிடமிருந்து 180 ml அளவுள்ள 44 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தொடர்ந்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மிது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவிலக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News