கோவையில் பணத்தை கையாடல்: கணக்காளர் மீது வழக்கு பதிவு
கோவையில் பணத்தை கையாடல் செய்து மனைவி பெயருக்கு மாற்றிய கணக்காளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2023-12-30 15:53 GMT
கோவை டீச்சர்ஸ் காலனி பகுதியில் வசித்து வருபவர் பிரகாஷ்.பந்தய சாலையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதியில்(Taj Vivanta) கணக்காளராக பணியாற்றி வருகிறார்.
விடுதியின் வரவு செலவுகளை பார்ப்பதுடன் பொருட்கள் வாங்குவது,பணம் கொடுப்பது உள்ளிட்டவைகளுக்கு காசாளராகும் பிரகாஷ் பணி செய்து வந்துள்ளார். இந்த நிலையில் 11 லட்சம் ரூபாய் கணக்கில் வராததால் விடுதியின் மேலாளர் சுமன் சித்துவாரி பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
விசாரணையில் கணக்காளராக பணியாற்றிய பிரகாஷ் தனது மனைவி மோகனப்பிரியாவின் கணக்கிற்கு பணத்தை மாற்றி உள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து பிரகாஷ் மற்றும் அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.