கொங்கணாபுரம் அருகே தீயில் கருகி பணம், நகை சேதம்

கொங்கணாபுரம் அருகே வீடு தீப்பற்றி எரிந்ததில் பணம் மற்றும் தங்க நகைகள் சேதமடைந்தது.;

Update: 2023-12-22 15:47 GMT

தீயில் எறிந்த வீடு

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம்G கச்சுப்பள்ளி கிராமம் மோரன்வளவு வண்டிக்காரன் காடு பகுதியை சேர்ந்த கணேசன் மகன் அழகுராஜ் (39) இவருக்கு திருமணம் ஆகி ஆண் மற்றும் பெண் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி கொங்கணாபுரம் அரசு பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வருகிறார்.

அழகுராஜ் கொங்கணாபுரம் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில்  இருவரும் வேலைக்குச் சென்ற நிலையில் வீட்டில் அவரது தாயார் செல்லம்மாள் மற்றும் அவரது மகன் வீட்டில் இருந்துள்ளனர்.

Advertisement

அப்போது  வீட்டின் கூரை ஒரு பகுதி தீப்பற்றி எரிவதாக அருகில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து கொங்கணாபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் குடிசை வீடு முற்றிலும் எரிந்து மூன்று லட்ச ரூபாய் ரொக்க பணம் மற்றும் 13 சவரன் தங்க நகை தீயில் எறிந்தன தகவல் அறிந்து அங்கு வந்த கொங்கணாபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News