பாபநாசம் பகுதியில் வாகன சோதனையில் ரூ 53,890 பறிமுதல்
பாபநாசம் பகுதியில் வாகன சோதனையில் ரூ 53,890 பறிமுதல் பறக்கும் படை அதிகாரி நடவடிக்கை
Update: 2024-04-12 15:45 GMT
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படை அதிகாரி பாலசுப்பிரமணியன் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த திருவையாறு ராஜா நகர் பகுதியில் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் சோதனை செய்தபோது ரூ 53 ஆயிரத்து 890 உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை கைப்பற்றினர் பின்னர் பாபநாசம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன் பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர்களிடம் வாகன சோதனையில் பறிமுதல் செய்த பணத்தை ஒப்படைத்தனர் அப்போது உடன் மண்டல துணை வட்டாட்சியர் தமயந்தி தேர்தல் துணை வட்டாட்சியர் விவேகானந்தன் வருவாய் ஆய்வாளர் கமலி ஆகியோர் உடன் இருந்தனர் .