வீரகனூர் பேரூராட்சியில் காரில் எடுத்து சென்ற ₹1 லட்சம் பறிமுதல்
வீரகனூர் பேரூராட்சியில் காரில் எடுத்து சென்ற ₹1 லட்சம் பறிமுதல்.;
Update: 2024-04-07 12:49 GMT
பணம் ஒப்படைப்பு
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி|வீரகனூர் பேரூராட்சி உட்பட்ட ராயர் பாளையம் பகுதியில், தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சுலைமான் சேட் தலைமையில் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்த போது, 1 லட்சம் இருப்பது தெரிந்தது. விசாரணையில் உரிய ஆவணங்கள் இன்றி அதே பகுதியைச் சேர்ந்த ராஜதுரை என்பவர் கொண்டு வந்தது தெரிந்தது. இத யைடுத்து பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் வெங்கடேசனிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்து கெங்கவல்லி சார்நிலை கருவூ லத்தில் ஒப்படைக்கப்பட்டது.