மாடு மேய்க்கும் போது தகராறு - ஒருவர் காயம்
பிச்சம்பட்டியில் மாடு மேய்க்கும் போது ஏற்பட்ட தகராறில் காயம் அடைந்தவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-02-26 02:50 GMT
காவல் நிலையம்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, பிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி வயது 48. அதே பகுதியைச் சேர்ந்தவர் முரளி சங்கர். இவரது மனைவி ரம்யா. பிப்ரவரி 24ஆம் தேதி மதியம் 3 மணி அளவில், பிச்சம்பட்டி மயானம் அருகே மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது, இருதரப்பினரிடையே எழுந்த வாக்குவாதத்தில், கைகலப்பாக முடிந்தது. மேலும் முரளி சங்கர் அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து ரவியை தாக்கியுள்ளார். இதில் உள் காயம் ஏற்பட்ட ரவி உடனடியாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ரவி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், முரளி சங்கர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.