புளுதியூர் வரச் சந்தையில் 43 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

புளுதியூர் வார சந்தையில் மாடுகள் 6,500 முதல் 48,500 வரையும், ஆடுகள் 5,500 முதல் 9,700 வரை 43 லட்சத்திற்கு விற்பனை

Update: 2024-02-29 06:23 GMT
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், வாரந்தோறும் புதன்கிழமை கால்நடை சந்தை நடக்கிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திரு வண்ணமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடு, எருமை மாடு, இறைச்சி மாடு, நாட்டுக்கோழி, சேவல் ஆகியவற்றை விற்க மற்றும் வாங்குவதற்காக வந்து செல்கின்றனர் வெளிமாநிலம் மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், கால்நடைகனை வாங்க வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் மாடுகள் 6,500 முதல் 48,500 வரையும், ஆடுகள் 5,500 முதல் 9,700 வரை 43 லட்சத்திற்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News