புளுதியூரில் ரூ.43 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை
கோடை மழை துவங்கியுள்ள நிலையில் புளுதியூர் வார சந்தையில் ரூ.44 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானது.
அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், வாரந்தோறும் புதன்கிழமை கால்நடை சந்தை நடைபெற்று வருகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை மாடு, இறைச்சிக்காக மாடுகள், நாட்டுக்கோழி மற் றும் சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
மாநிலம் முழுவதுமாக கோடை மழை பெய்து வருவதால் சந்தையில் கால்நடைகளை வாங்க அதிக அளவில் வியாபாரிகள் வந்திருந்தனர். கன்று குட்டிகள் மற்றும் மாடுகள் 16,500 முதல் 50,000 வரையும். ஆடுகள் 5 ஆயிரம் முதல் 9,500 வரையும், நாட்டுக்கோழி, சேவல்கள் 350 முதல் 1,200 வரையும் விற்பனையானது.ஒட்டு மொத்தமாக நேற்றைய சந்தையில் 44 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.