காவிரி துலா உற்சவம் - மயூரநாதர் ஆலயத்தில் திருத்தேரோட்டம்

Update: 2023-11-16 00:51 GMT

தேர்த்திருவிழா 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவம், மிகவும் புகழ்பெற்றதாகும்.  ஐப்பசி மாதம், காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொள்வதாக ஐதீகம். அதனை முன்னிட்டு, மயிலாடுதுறையில் பாடல்பெற்ற சிவாலயங்களில், துலா உற்சவம், கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் உற்சவம், இன்று மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, சுவாமி, அம்பாள் பெரிய தேரிலும், புதிதாக செய்யப்பட்ட இரண்டு சிறிய தேர்களில் வள்ளி தெய்வானை சமேத முருக பெருமான், விநாயகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட, பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம், வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தேரோடும் திருவீதிகளில் வலம் வந்த, 3 தேர்களை திரளான பக்தர்கள்  வடம் பிடித்து பக்தி பரவசத்துடன் இழுத்தனர். நாளை  துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான, பிரசித்தி பெற்ற கடை முக தீர்த்தவாரிவிழா நடைபெறுகின்றது. இதில், காவிரியின் இரண்டு கரையில் உள்ள, சிவாலயங்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி, நடைபெற உள்ள தீர்த்தவாரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கடை முக தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News