காவிரி தண்ணீர் பிரச்சனை: உழவர் சங்க தலைவர் அறிக்கை
By : King 24X7 News (B)
Update: 2023-11-18 06:37 GMT
கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை இந்தாண்டு பெற்று தருவதில் காவிரி தண்ணீர் விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசும் டெல்டா விவசாயிகளுக்கு துரோகம் செய்ததை கண்டித்தும் - காவிரி ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் ஒருதலைபட்சமாக கர்நாடகா அரசுக்கு சாதகமாக செயல்படுவதை கண்டித்து,
வருகிற நவம்பர் 21-ந் தேதி செவ்வாய்கிழமை காலை 11.00 மணிக்கு தமிழக எல்லைப்பகுதியான ஜூஜூவாடியிலிருந்து புறப்பட்டு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைமையில் கர்நாடகா அணையிலிருந்து காவிரி தண்ணீரை நேரடியாக தண்ணீர் திறப்போம் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.