மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய திமுகவினர் !

சின்னசேலம் அருகே தி.மு.க., தலைவர் பிறந்த நாளையொட்டி கட்சிக் கொடி ஏற்றப்பட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

Update: 2024-03-02 04:42 GMT

 தி.மு.க., தலைவர் பிறந்த நாள்

சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுார் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். கவுன்சிலர் சுதா மணிகண்டன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் தனலட்சுமி கோவிந்தன் வரவேற்றார். தி.மு.க., தலைவர் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கட்சிக் கொடி ஏற்றப்பட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானமும், பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு, நோட்டு, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிளைச் செயலாளர்கள் வரதன், பெரியசாமி, மாவட்ட பிரதிநிதி முருகேசன், நிர்வாகிகள் முருகன், அருணாசலம், ராமலிங்கம், இளைஞரணி துணை அமைப்பாளர் மணிபாரதி உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News