திருக்கோவிலூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா
திருக்கோவிலூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா நடந்தது.
திருக்கோவிலூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் ஹைடெக் வகுப்பறை ஏற்படுத்த முடிவு செய்தனர். திருக்கோவிலூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழா வரும் ஜூலை, 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் அமைப்பினர் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த 86ம் ஆண்டு பேட்ச் முன்னாள் மாணவர்கள் அமைப்பின் சார்பில் பள்ளி தேவையை நிறைவு செய்யும் வகையிலான ஆலோசனைக் கூட்டம் பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமை ஆசிரியர் பாஸ்கரன் வரவேற்றார்.
86ம் ஆண்டு பேட்ச் முன்னாள் மாணவர்கள் அமைப்பை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு குறிப்பிட்ட வகுப்பறைகளை முற்றிலும் டிஜிட்டல் மையமாக ஹைடெக் முறையில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க ஒப்புக் கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் அமைப்பினர் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர்கள் வில்வபதி, பாலமுருகன், வெங்கடேசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர்.