நூற்றாண்டு நினைவரங்கம்: அடிக்கல் நாட்டு விழா
லால்புரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்க அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்.;
Update: 2023-12-23 01:20 GMT
லால்புரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்க அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்.
தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்திற்குட்பட்ட லால்புரம் பகுதியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை வாயிலாக பெரியவர் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்க வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், சிதம்பரம் சார் ஆட்சியர் ரஷ்மி ராணி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.