‘டிசைனிங் மாணவர்கள் தொழில் துவங்க மத்திய அரசின் நிதிஉதவி’
சங்ககிரி விவேகானந்தா மகளிர் நிறுவனங்களில் மத்தியஅரசின் சிறுகுறு தொழில்துறை அமைச்சரவையின் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் - டெல்லி சிறுகுறு அமைச்சரவை ஆலோசகர் சோமசுந்தரம் உறுதி.
சங்ககிரி விவேகானந்தா மகளிர் நிறுவனங்களின் ஒரு அங்கமான விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியூம் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் சார்பாக மத்திய அரசின் சிறு குறு தொழில் அமைச்சரவை சார்பில் திறன் மேம்பாட்டுத் துறையின் எதிர்கால உத்தியான ‘ஃபேஷன் தொழிற்சாலை நிர்வாக மேம்பாடு’ என்ற தலைப்பில் பயிற்சி முகாம் சங்ககிரி விவேகானந்தா கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது.
துவக்க விழாவிற்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனகைளின் தாளாளர் மற்றும் செயலர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி தலைமைதாங்கினார். இயக்குனர் திருமதி கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், வைஸ்சேர்மன் டாக்டர் கிருபாநிதி கருணாநிதி, இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, செயல் இயக்குநர் டாக்டர் குப்புசாமி, முதன்மை நிர்வாகிகள் பேராசிரியர் சொக்கலிங்கம், பேராசிரியர் வரதராஜீ, திறன் மேம்பாட்டுத் துறை இயக்குநர் குமாரவேல், டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர், ஐ.க்யூ.ஏ.சி இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார், அட்மிஷன் அதிகாரி பேராசிரியர் தமிழ்ச்செல்வன், வேலைவாய்ப்புத் துறை அதிகாரி அருண்பிரசாத் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் சிறுகுறு தொழில் அமைச்சரவை ஆலோசகர் மற்றும் ஃபேஷன் உற்பத்தித் திறன் மேம்பாட்டு வல்லுநர் டெல்லி சோமசுந்தரம் கலந்து கொண்டார். அவர் தனது சிறப்புரையில், ‘மத்திய அரசு இளம் பெண்களுக்கு எண்ணற்ற தொழில் முனைவோர் மேம்பாட்டு நிதி உதவியை வழங்கி வருகிறது; தேசிய அளவில் மிகச் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இந்தியா முழுவதும் பெண்களுக்கு குறிப்பாக கல்லூரி மாணவிகளுக்கு மத்திய அரசு தொழில் பயிற்சி வழங்கி வருகிறது; திறமையான பெண்கள் அனைவரையும் தொழில் முனைவோராக மாற்றி இந்தியாவை பொருளாதார வல்லரசாக மாற்ற மத்திய அரசு அனைத்து முன் முயற்சிகளையும் எடுத்து வருகிறது; அந்த அடிப்படையில் ஆசியாவின் மிகப் பெரிய மகளிர் கல்வி நிறுவனமான சங்ககிரி மற்றும் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் மாணவிகளுக்கு சிறு குறு தெரிழல் அமைச்சரவை மூலம் மத்திய அரசு பயிற்சியளித்து வருகிறது; இதில் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன; ஒவ்வொரு மாணவியின் பயிற்சிக்கு மத்திய அரசு ரூ10,000 செலவு செய்து மாணவியரிடம் மிகவும் சகாய தொகையைப் பதிவு கட்டணமாக நிர்ணயம் செய்து அனைத்து மாணவிகளும் பயிற்சி பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது: உலக அளவில் ஃபேஷன் துறையில் தொழில் முனைவோராக முன்னேற மாணவிகளுக்கு இத்தகைய மத்திய அரசின் பயிற்சி மிகவும் அவசியம்’ என்று குறிப்பிட்டார். அதன் பிறகு நூற்றுக்கணக்கான மாணவிகளின் மத்திய அரசு தொழில் முனைவோர் கடன் உதவி மற்றும் நிதிஉதவி சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு ஆலோசகர் சோமசுந்தரம் பதில் அளித்து அவர்களின் சந்தேகங்களை நீக்கினார்.
இந்த பயிற்சி முகாமில் நூற்றுக்கணக்கான டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் மாணவிகள் பங்கேற்றனர். சிறந்த முறையில் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கும் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் சங்ககிரி வளாக முதன்மை நிர்வாகி பேராசிரியர் வரதராஜீ, டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியூம் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர், ஐ.க்யூ.ஏ.சி இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார், சிறப்பு விருந்தினர் சோமசுந்தரம் ஆகியோர் வழங்கினர். மத்திய அரசின் பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் பிரபுகுமார் மற்றும் பேஷன் கிளப் மாணவியர் அமைப்பினர் சிறப்பாக செய்திருந்தனர்.