சங்கடஹர சதுர்த்தி விழா
கீழ்ப்பட்டாம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற சங்கடஹர சதுர்த்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
Update: 2024-03-29 10:26 GMT
சங்கடஹர சதுர்த்தி விழா
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்ப்பட்டாம்பாக்கம் மெயின் ரோடு பகுதியில் உள்ள அருள்மிகு வரசித்தி வினாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.