கொள்ளிடம் காவல்நிலையத்தில் கூண்டோடு மாற்றம்: எஸ்.பி அதிரடி

திருச்சி மாவட்டம் கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் நடைபெற்ற மணல் கொள்ளையை தடுக்கத் தவறியதால் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்கள் அனைவரையும் ஆயுதப்படைக்கு மாற்ற மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-06-22 09:30 GMT

காவல் நிலையம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் மணல் கொள்ளை நடப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் நடைபெற்ற மணல் கொள்ளையை தடுக்கத் தவறியதால் கொள்ளிடம் காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைத்து காவலர்களையும் கூண்டோடு ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News