எழுவன்கோட்டையில் தேர் திருவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

எழுவன்கோட்டையில் விஸ்வநாத சுவாமி கோவிலில் நடந்த தேர் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-05-23 08:17 GMT

எழுவன்கோட்டையில் விஸ்வநாத சுவாமி கோவிலில் நடந்த தேர் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே எழுவன்கோட்டை கிராமத்தில் உள்ள சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானம் பாத்தியப்பட்ட அகிலாண்டேஸ்வரி அம்பாள் விஸ்வநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய கோவிலாக உள்ளது. இக்கோவிலின் முக்கிய திருவிழாவான விசாக உற்சவ விழாவில் தேர் திருவிழா அதி விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விசாக உற்சவ விழா கடந்த 13ஆம் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மூலவர்கள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வருதல் அதனை தொடர்ந்து சிறப்பு தீபாரணை நடைபெற்று.

அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டு வந்தது. இன்று சுவாமி வீதி உலா வந்து கோவில் முன்பாக அலங்கரிக்கப்பட்ட தேரில் வந்தடைந்தது. பின்னர் கிராம மக்கள் கோவிலில் ஒன்று கூடி ஊர்வலமாக மேளதாளத்துடன் வந்து தேரில் உள்ள அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு தீவாரணை நடைபெற்று பொதுமக்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளில் பலம் வந்து நிலைய அடைந்ததும், பொதுமக்களுக்கு மாம்பழம் வீசப்பட்டது, வீசிய மாம்பழங்களை பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு பெற்றுச் சென்றனர்.

Tags:    

Similar News