மங்கனூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் தேர் கொடியேற்றம்
புதுக்கோட்டை மாவட்டம் மங்கனூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் தேர் கொடியேற்றம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மங்கனூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் தேர் கொடியேற்றத்துடன் தொடங்கியது இதில் மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் தச்சங்குறிச்சி பங்கு சந்தை பால்ராஜ் தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது இதில் ஜாதி மத இன பாகுபாடின்றி 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்* புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மங்கனூர் கிராமத்தில் புனித அந்தோனியார் ஆலய திருத்தலம் அமைந்துள்ளது தேர் திருவிழா ஆண்டு வருடம் மே மாதம் கொண்டாடப்படுவது வழக்கம் அதனை ஒட்டி இந்த ஆண்டுக்கான திருவிழாவின் தொடக்க நிகழ்வான கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது.
மேலும் ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது பின்னர் அந்தோணியாரின் திரு உருவம் தாங்கிய கொடியை முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வர வைக்கப்பட்டு பின்னர் கொடியேற்றம் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து தச்சங்குறிச்சி பங்குத்தந்தை பால்ராஜ் தலைமையில் மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் சிறப்பு கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது இதில் ஜாதி மத இன பாகுபாடின்றி 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொடியேற்று நிகழ்வில் பங்கேற்று அந்தோனியாரை வழிபட்டனர் மேலும் கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது.