விராலிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் தேர் முகூர்த்தகால் நிகழ்ச்சி

விராலிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் தேர் முகூர்த்தகால் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2024-05-19 12:06 GMT

விராலிமலை சுப்ரமணிய சுவாமி கோயில் 

விராலிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கடந்த 14ம் தேதி சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்து, மூலவர் சன்னதிக்கு முன்பு உள்ள கொடிமரத்தில் காப்பு கட்டப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சி யாக வரும் 22ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதை முன்னிட்டு கோயில் அடிவாரத்தில் தேரை தூய்மை செய்யும் பணி நடந்து,தேருக்கு முகூர்த்தகால் நடப்பட்டது. நிகழ்ச்சியில் செயல் அலுவலர் கவிதா, திருப்பணிக்குழு ஒங்கிணைப்பாளர் பூபா லன், விஷ்ணு, சிவகுமார், கோயில் மேற்பார்வை யாளர்கள் மாரிமுத்து,

சுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். விழாஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்துடன் இணைந்து மண்டகபடிதா ரர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News