நாகர்கோவில் கிருஷ்ணசாமி கோவிலில் தேரோட்டம்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கிருஷ்ணசாமி கோவிலில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், கிருஷ்ணன் கோவிலில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணசாமி கோவில் உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைய துறைக்கு உட்பட்ட இந்த கோவில் தமிழ்நாட்டின் குருவாயூர் கோயில் என அழைக்கப்படுகிறது. இங்கு கிருஷ்ணர் இரு கைகளிலும் வெண்ணை ஏந்தி குழந்தை கிருஷ்ணராக காட்சியளிக்கிறார். இந்த கோவிலின் இந்த ஆண்டுக்கான சித்திரை விழா கடந்த 14ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் ஒன்பதாம் நாளான இன்று தேரோட்டம் காலை 9 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். மற்றும் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி உட்பட பரர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் பக்தர்கள் திரண்டு தேரோட்டத்தை கண்டு களித்தனர். இந்த தேரோட்டத்தை ஒட்டி வடசேரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.