பேராவூரணி நீலகண்டபிள்ளையார் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

பேராவூரணி அருள்மிகு நீலகண்டப்பிள்ளையார் கோயிலில் இன்று மாலை தேர் திருவிழா நடக்கிறது.;

Update: 2024-04-22 03:45 GMT

தேர் 

 பேராவூரணி முடப்புளிக்காடு கிராமத்தில் ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்களும் வண்ணமயில் வாகனம், காமதேனு வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், மயில் வாகனம், ரிஷப வாகனம் என பல வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் முக்கிய தினமான நாளை 22 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் பால்காவடி, பன்னீர்காவடி, அக்னி காவடி, தொட்டில் காவடி, பறவை காவடி என பல்வேறு காவடிகளை பக்தர்கள் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

Advertisement

இன்று மாலை 5 மணிக்கு தேரோட்டத் தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகன் தேரில் எழுந்தருள உள்ளார். தொடர்ந்து 10 ஆம் திருவிழாவாக தீர்த்தவாரியும், 11ஆம் திருவிழாவாக திருக்கல்யாணமும், இரவு தெப்ப உற்சவமும் 12 ஆம் திருவிழாவாக விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை எம்.எல்.ஏ நா.அசோக்குமார், முடப்புளிக்காடு கிராமத்தார்கள், பரம்பரை அறங்காவலர்கள், ஸ்தானிகர் சங்கரன் வகையறாக்கள் திருக்கோயில் பணியாளர்கள், பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படி தாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News