சஞ்சீவிராயர் கோயிலில் தேரோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், பிடாரம்பட்டி சஞ்சீவிராயர் கோயில் நடைப்பெற்ற தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-05-26 13:06 GMT

தேரோட்டம்

விராலிமலை அருகே பிடாரம் பட்டி சஞ்சீவிராயர் கோயில் திருவிழா கடந்த 17ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. பத்தாம் நாள் திருவிழாவில் தொடர்ந்து தினமும் யானை, கிளி, அன்னம், மான், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சஞ்சீவிராயர் எழுந்தருள வீதி உலா நடந்தது. ஒன்பதாம் நாள் திருவிழாவான சஞ்சீவிராயர் தேரில் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடந்தது. கோயிலை வலம் வந்த தேர் நிலையடைந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். இரவு பல்லாக்கு நடந்தது. இன்று தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைகிறது
Tags:    

Similar News