சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை தேரோட்டம்
உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா விழாவை முன்னிட்டு நாளை தேரோட்டம் நடைபெற உள்ள்ளது;
Update: 2023-12-25 09:07 GMT
நடராஜர் கோவிலில் தேரோட்டம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா கடந்த 18 ஆம் தேதி துவங்கி நடந்து வருகிறது. முக்கிய விழாவான தேரோட்டம் நாளை 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேரோட்டத்தில் விநாயகர், சுப்ரமணியர், சிவகாமசுந்தரி அம்பாள், நடராஜர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தருகின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு கீழ வீதியில் தேர் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 5 தேர்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.