ஊதியூர் அருகே செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
ஊதியூர் அருகே செல்லாண்டியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த ஊதியூர் பொன்னூதி மாமலையின் தென்புறமும் மரவபாளையம் அப்பண்ண பரமேஸ்வரர் கோவிலின் மேற்கு புறமும் அமைந்துள்ள முதலிபாளையம் கிராமம் நத்தகாட்டுப்புதூரில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் உள்ள அம்மன் சிலை சுமார் 700 வருடங்கள் பழமையானது என்றும்,
உளியால் துளைபடாத சிலையென்றும் கூறப்படுகிறது. இந்த கோவில் நேற்று முன்தினம் வைகாசி விசாக சிறப்பு பூஜைகளும் அதனை தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகளும் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த அம்மனை வழிபட்டு சென்றால் மனக்குழப்பம்,
மனநோய், எதிர்வினைகள் ஆகியவை அகலும் என்பதால் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர். மேலும் பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அபிஷேக ஆராதனை பிரசாதமும் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.