மண்டல அளவிலான பயிலரங்கத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

மண்டல அளவிலான வளர்மிகு வட்டாரங்கள் பயிலரங்கத்தை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.;

Update: 2024-03-08 16:35 GMT

மண்டல அளவிலான பயிலரங்கம்

செங்கல்பட்டு மாவட்டம் ஓஎம்ஆர் சாலை மெரினா மால் அரங்கத்தில், மாநில திட்ட குழுவின் மூலம் பின்தங்கிய வட்டாரங்களை மேம்படுத்துதல் மற்றும் அடித்தட்டு மக்களுக்கு திட்டங்களை கொண்டு செல்வதற்காக, வளர்மிகு வட்டாரங்கள் வளர்ச்சி குறித்த மண்டல அளவிலான பயிலரங்கத்தினை மாவட்ட ஆட்சியர் அருன்ராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், அரசின் திட்டங்கள் மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், அதிகாரிகளுக்கும்,மக்களுக்கும் இடைப்பட்ட இடைவெளியை பூர்த்தி செய்யவும், அரசின் அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு போய் சேர்க்க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதை அதிகாரிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பின்தங்கிய கிராமப் பகுதிகளில் உள்ள மக்களுக்கும் அனைத்து விதமான சலுகைகளையும் கொண்டு போய் சேர்க்க அரசு அதிகாரிகள் முன் வர வேண்டும் என்றார்.

Tags:    

Similar News