நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்த சேரன் மெட்ரிக் மாணவர்கள்

கரூர் அடுத்த வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்தனர்.

Update: 2024-05-06 12:30 GMT

கரூர் அடுத்த வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்தனர்.


  கடந்த மார்ச் மாதம் தேர்வு எழுதிய +2 மாணாக்கர்களுக்கான முடிவுகள் இன்று தமிழக முழுவதும் வெளியானது . இதனைத் தொடர்ந்து கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் செயல்படும் சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணாக்கர்கள் 380 பேர் பிளஸ் டூ தேர்வு எழுதினர். இன்று முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, தேர்வு எழுதிய 380 பேரும் தேர்ச்சி அடைந்தனர்.

இதில் சந்துரு என்ற மாணவன் 592 மதிப்பெண்களும், பவானி ஸ்ரீ என்ற மாணவி 589 மதிப்பெண்களும், தார்னீஸ் என்ற மாணவனும் , கனிகா என்ற மாணவியும் 585 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்தப் பள்ளியில் படித்த மாணாக்கர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் 16 பேரும்,காமர்சில் 9- பேரும், பிசிக்ஸ்-இல் 4-பேரும், எக்கனாமிக்சில் 4- பேரும், மேக்ஸ்-ல் 3- பேரும், அக்கவுண்டன்சில் 2- பேரும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் 2- பேரும், பிசினஸ் மேக்ஸ்-ல் 1-வர் என மொத்தம் 41 பேர் சென்டம் மதிப்பினை எடுத்துள்ளனர். அதிக மதிப்பெண்கள் எடுத்து பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணாக்கர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags:    

Similar News