சிதம்பரேஸ்வரர் கோவிலில் சோமவார அஷ்டமி வழிபாடு
கலவை சிதம்பரேஸ்வரர் கோவிலில் சோமவார அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-17 17:07 GMT
சித்தமபரம் கோயில்
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த கலவைபுதூர் கிராமத்தில் உள்ள 24 சன்னதிகளுடன் கூடிய சிவகாமி அம்மை உடனாகிய சிதம்பரேஸ்வரர் கோவிலில் சோமவார அஷ்டமி பூஜை நடைபெற்றது.
சிதம்பரேஸ்வரர் மற்றும் கால பைரவருக்கு, பால், தயிர், சந்தனம், பன்னீர், போன்ற பலவித வாசனை திரவியங்களை கொண்டு டாக்டர் ஜா.அருணாச்சலம் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்தார். தொடர்ந்து நடைபெற்ற சோமவார அஷ்டமி பூஜையில் அப்பகுதியில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜையின் முடிவில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.