மாவட்ட முதன்மை நீதிபதி சாமி தரிசனம்
செஞ்சி வெங்கட்ரமணர் கோவிலில் மாவட்ட முதன்மை நீதிபதி புஷ்பராணி சாமி தரிசனம் செய்தார்.
Update: 2024-05-03 07:16 GMT
விழுப்புரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதியாக இருப்பவர் புஷ்பராணி. இவர் தனது குடும்பத்துடன் செஞ்சிக்கோட்டையில் உள்ள வெங்கட்ரமணர்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் குடும்பத்தினருடன் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது கோவில் நிர்வாகத்தினர் ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவனத் தாளாளர் வழக்கறிஞர் ரங்கபூபதி, வைகைதமிழ்ச்செல்வன் மற்றும் வக்கீல் சக்திராஜன், சுதர்சன பாகவதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.