முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் : அமைச்சர் அறிக்கை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என்று மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.கீதாஜீவன் அறிவித்துள்ளார்.

Update: 2024-03-01 03:41 GMT

அமைச்சர் கீதாஜீவன்

அமைச்சர் பி.கீதாஜீவன்  வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் கழக கொடியேற்றுதல், இனிப்புகள் வழங்குதல், மோதிரம் வழங்குதல், முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இலங்களுக்கு உணவு வழங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பொதுக்கூட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கிறது.

01.03.2024 வெள்ளிக்கிழமை அன்று தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழகங்களுக்கு உட்பட்ட கிளை மற்றும் வார்டு கழகங்கள் தோறும் கழகத்தின் இருவண்ணக் கொடியை புதிதாக ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும், கழக கொள்கை விளக்கப் பாடல்கள் ஒலிபரப்பியும் உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. மதியம் 12.00 மணிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து முதியோர், ஆதரவற்றோர் இல்லங்கள், மாற்றுதிறனாளிகள் இல்லங்களுக்கு மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட இருக்கிறது. 

02.03.2024 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி அளவில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழக தலைவர் பிறந்த தினமான 01.03.2024 அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சியும், அன்றைய தினம் மாலை 4.00 மணிக்கு கோவில்பட்டி நகர தி.மு.க சார்பில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. அதுபோல அன்றைய தினம் மாலை 3.00 மணிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் எட்டையபுரத்தில் 100 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 02.03.2024 அன்று இரவு 7.00 மணிக்கு கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் ஏ.பி.சி.வி சண்முகம், மா.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர், கனகராஜ் மற்றும் தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். 03.03.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி அளவில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க மகளிரணி சார்பில் கழக தலைவர் பிறந்தநாள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் விளாத்திகுளம் ஜி.வி.மஹாலில் நடைபெற இருக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி கலந்து கொள்கிறார்கள்.

அன்றைய தினம் மாலை 6.00 மணிக்கு விளாத்திகும் சட்டமன்ற தொகுதி தி.மு.க சார்பில் திராவிட மாடல் நாயகரின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு தூத்துக்குடி மாநகர தி.மு.க சார்பில் திராவிட மாடல் நாயகரின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி சிதம்பரநகர் பேரூந்து நிறுத்தம் எதிரில் நடைபெற இருக்கிறது.

அனைத்து நிகழ்ச்சிகளையும் சம்பந்தப்பட்ட கழக நிர்வாகிகள் சிறப்பாக செய்திடவும், அனைத்து நிகழ்ச்சிகளிலும் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கிளைக்கழகம் மற்றும் வார்டு கழக செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள் கழக தோழர்கள் தவறாது கலந்து கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News