ஜூலை 11ஆம் தேதி முதல் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் துவக்கம்

சிவகங்கையில் ஜூலை 11ம் தேதி முதல் மக்களிடம் முதல்வர் திட்ட முகாம் துவங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர்.

Update: 2024-07-05 12:14 GMT

மாவட்ட ஆட்சியர் 

சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற 11.07.2024 முதல் 13.09.2024 வரை "மக்களுடன் முதல்வர்" திட்ட முகாம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள தேதிகளில் அந்தந்த பகுதிகளில் நடைபெறும்.

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு, தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News