மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை சோ்மன் செல்வராஜ் துவக்கி வைத்தார்;
By : King 24x7 Website
Update: 2023-12-19 16:30 GMT
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை சோ்மன் செல்வராஜ் துவக்கி வைத்தார்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஜீவா செட் பகுதியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்வில், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குதல், முதியோர் உதவித்தொகை மற்றும் இலவசமாக வங்கி கணக்கு துவக்குதல், மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான சேவைகளுக்கான, திட்ட துவக்க விழா நிகழ்ச்சியை நகர்மன்ற தலைவர் மோ.செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் ப.பாலமுருகன், திருச்செங்கோடு கோட்டாட்சியர் சுகந்தி, நகராட்சி ஆணையாளர் தாமரை ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். இந்த முகாமில் 13 அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். பொதுமக்கள் பலரும் இந்த முகாமில் கலந்துகொண்டு தங்கள் பிரச்சனையை பூர்த்தி செய்து கொண்டனர்...