மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் பங்கேற்பு;
By : King 24x7 Website
Update: 2023-12-27 17:19 GMT
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் பங்கேற்பு
திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மாநகராட்சி மேயர் பங்கேற்பு. திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலம் 2-வது வார்டு 4,5,7 ஆகிய பகுதிகளுக்கு நெருப்பரிச்சல் கொங்குகலையரங்கத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் முகாமில் பொதுமக்களின் கோரிக்கைகளை அவர்கள் இருப்பிடத்திலேயே நிவர்த்தி செய்தல் குறித்த முகாமினை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பார்வையிட்டு பொதுமக்கள் கணினி மூலம் பதிவு செய்த கோரிக்கை மனுக்களுக்கான ஒப்புதல் சீட்டுகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 2_வது மண்டல தலைவர் கோவிந்தராஜ், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார்ஜிகிரியப்பனவர், உதவி ஆணையாளர் முருகேசன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்...