மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

ஒடுக்கத்தூரில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-12-30 01:09 GMT

ஒடுக்கத்தூரில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் பேரூராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன், பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேலூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் 18.12.2023 முதல் 05.01.2024 வரை நடத்த திட்டமிட்டு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி அருகில் அமைந்துள்ள 18 கிராம பஞ்சாயத்துகளில் நடைபெற்று வருகிறது. அதன்படி வேலூர் ஒடுக்கத்தூர் பேரூராட்சி நவீன் மஹாலில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இம்முகாமில் அரசின் சார்பில் எரிசக்தித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ,கூட்டுறவு உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறை ,தொழிலாளர் நலத்துறை (சமூக பாதுகாப்பு திட்டம்) ஆகிய 14 துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு பொதுமக்களிடம் இருந்து 749 மனுக்கள் பெறப்பட்டன. இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் 14 துறைகளின் மனுக்கள் பதிவு செய்யும் மையங்களை பார்வையிட்டார். மேலும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் கணினியில் பதிவேற்றம் செய்யும் முறைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து இம்முகாமில் பெறப்பட்ட மனுக்களில் உடனடியாக தீர்வு காணப்படக்கூடிய 24 மனுக்களின் மீது ஆய்வு செய்து விண்ணப்பத்தாரர்களிடம் அதற்கான ஆணைகளை வழங்கினார்.

Tags:    

Similar News