முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

அரசூரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Update: 2024-03-01 13:47 GMT

ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியம்  இண்டியம்பாளையம் ஊராட்சி அரசூரில் தமிழக முதல்வர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளையோட்டி கழகக் கொடியினை சத்தி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே சி பி இளங்கோ அவர்கள் கட்சிக்கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஒன்றிய குழு உறுப்பினர் ராஜம்மாள் மற்றும் முன்னாள் கவுன்சிலர் விஸ்வநாதன்  மாக்ககிணாங்கோம்பை ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன்  சத்தி தெற்கு ஒன்றிய துணை செயலாளர் அசோகன் மற்றும் கிளைச் செயலாளர்கள் தங்கவேல் ஏ எம் சாமிநாதன்  கே எம் சாமிநாதன் சண்முகம் முருகேஷ் மற்ற துரைசாமி மற்றும் ஜீவா பெருமாள் பழனிச்சாமி ராமு மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

Tags:    

Similar News