முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

சிவகாசி அருகேயுள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடந்தது.

Update: 2024-03-01 17:40 GMT
சிவகாசி அருகேயுள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடந்தது. 

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகில் உள்ள வெம்பக்கோட்டையில் சிபியோ உண்டு உறைவிட பள்ளி என்ற ஆதரவற்ற குழந்தைகள் பள்ளி செயல்பட்டு வருகிறது.இங்கு 70க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன் தலைமை தாங்கினார் பள்ளி தாளாளர் முன்னிலை வகிக்க, கட்சி நிர்வாகிகள் பள்ளி ஆசிரியர்கள் மாணவ,மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.தமிழக முதல்வரின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு சிறப்பான திட்டமான காலை உணவு திட்டம் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்த்துப் பாடல்கள் இடம் பெற்றன.

வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன் பள்ளி குழந்தைகளுக்கு இலவச,சீருடை நோட்டுப்புத்தகம் என ஏராளமான பரிசுப் பொருட்களை வழங்கினார்.பின்னர் அறுசுவையுடன் கூடிய மதிய உணவு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கட்சி தொண்டர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News