முதலமைச்சரின் காலை உணவு திட்டம் - நகராட்சி ஆணையர் ஆய்வு
லால்குடி அருகே பரமசிவபுரத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் தயார் செய்யப்படும் உணவுகளை நகராட்சி ஆணையர் குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
Update: 2024-03-19 03:43 GMT
ஆணையர் ஆய்வு
திருச்சி மாவட்டம் லால்குடி பரமசிவபுரத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவுகள் தயார் செய்யும் சமையல் கூடம் இயங்கி வருகிறது.இங்கு தயார் செய்யப்படும் உணவுகள் பல்வேறு பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமையல் கூடத்தில் தயார் செய்யப்படும் உணவுகளை லால்குடி நகராட்சி ஆணையர் குமார் நேரில் சென்று பார்வையிட்டு உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.