பேராவூரணியில் நாளை மக்களுடன் முதலமைச்சர் முகாம்
பேராவூரணியில் நாளை மக்களுடன் முதலமைச்சர் முகாம் நடக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில் இன்று (டிச.19) செவ்வாய்க்கிழமை மக்களுடன் முதலமைச்சர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் திங்கட்கிழமை ஆய்வு செய்தார். அப்போது ,திருமண மண்டபத்தில் மின்சாரம் தடைபடாமல் இருக்க ஜெனரேட்டர் வசதி செய்யப்பட வேண்டும். குடிநீர் வசதி செய்திருக்க வேண்டும். போதிய கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
மழைக்காலமாக இருப்பதால் பயனாளிகள் மழையில் நனையாமல் இருக்க பந்தல் ஏற்பாடு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த சக்கர நாற்காலிகள் வைத்திருக்க வேண்டும்" என அறிவுறுத்தினார். அவரிடம், முகாமுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பா.பழனிவேல், பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர் ஆகியோர் விளக்கினர். ஆய்வின்போது, தலைமை எழுத்தர் அருள்மொழி, பேரூராட்சி குடிநீர் திட்டப்பணியாளர் சார்லஸ், சுகாதார மேற்பார்வையாளர் அன்பரசன், மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சிவசுப்பிரமணியன், வீரமணி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.