காட்டுமன்னார்கோவில் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு பதிவு சேர்க்கை முகாம்கள் காட்டுமன்னார்கோவிலில் வருகின்ற 1ம் தேதி நடைபெறூவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Update: 2024-02-28 14:09 GMT
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு பதிவு சேர்க்கை முகாம்கள் வருகின்ற 01.03.2024 முதல் 08.03.2024 வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் உள்ள பொதுமக்கள் 01.03.2024 காட்டுமன்னார்கோவில் உடையார்குடி கலைமகள் நிதி உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் நடைபெறும் முகாமில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.