குழந்தை கடத்தல் : மாவட்ட எஸ்பி எச்சரிக்கை

குழந்தை கடத்தல் குறித்து சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-08 13:02 GMT

மாவட்ட எஸ்பி

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி மார்ச் 7ஆம் தேதி இரவு 7:30 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கும் போது, சமீபகாலமாக சில சமூக விரோதிகள் குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதை காணப்படுகிறது.

இதுபோன்ற காணொளிகள் மக்களுடைய அச்சத்தையும் பீதியையும் உருவாக்க வேண்டும், என்ற நோக்கத்தோடு சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடன் சமூக விரோதிகள் சிலர் சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்.

போலியான செய்திகளை கேட்டும் காணொளிகளை பார்த்தும் பொதுமக்கள் அச்சப்படவோ பதற்றம் அடையவோ தேவையில்லை இது சம்பந்தமான பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உடனடியாக காவல்துறையை அணுக வேண்டும் , தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் வதந்திகளை மற்றவர்களுக்கு பகிரோ சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தவர், பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தைகளின் நலனுக்காக கல்வியும் காவலும், பயணம் போன்ற திட்டத்தின் மூலம் பல்வேறு விழிப்புணர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது எனவும், போக்சோ போன்ற குற்றங்கள் சமூகத்தில் வெளிவருவது என்பது,

நல்ல விஷயம் தான் இதன் மூலம் குற்றவாளிகள் கண்டு நடவடிக்கை எடுப்பதற்கும் மேலும் குற்றங்களை செய்யாமல் இருப்பதற்கும் இது ஒரு வாய்ப்பாக அமையும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சி என்பது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் மற்றும் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News