குழந்தை கடத்த முயற்சி: வடமாநில வாலிபருக்கு தர்மஅடி
திண்டுக்கல்லில் குழந்தையை கடத்த முயன்ற வடமாநில வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-02 12:25 GMT
திண்டுக்கல் பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் பிரபு நெசவுத் தொழிலாளி,30. இவரது குழந்தை சித்தாரத் மூன்று வயது. சிறுவன் வெள்ளி செயின் அணிந்திருந்தான். இதைப் பார்த்த வடமாநில வாலிபர் ஒருவர் குறுக்கும் நெடுக்குமாக அந்தப் பகுதி நடந்தே திரிந்தார்.
திடீரென அந்த வாலிபர் குழந்தையை தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தார். குழந்தையின் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் ஓடி வந்தனர். அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
திண்டுக்கல் தெற்கு போலீசருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் சம்பவ இடத்தில் வந்து விசாரித்த போது அந்த வாலிபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், குழந்தையை செயினுக்காக கடத்தியதும் தெரியவந்தது.