மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த பானிபூரி கடைக்காரர் கைது

பாப்பாரப்பட்டி அருகே மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை செய்த பானி பூரி கடை ஊழியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.;

Update: 2024-03-19 12:11 GMT

சிறுமிக்கு பாலியல் தொல்லை 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கே.பாப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர் மோகன் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இவர், பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த 9-ம் படிக்கும் சிறுமியை திருமணம் செய்து கொள்ள பெண் கேட்டதாக தெரிகிறது. அதற்கு சிறுமியின் பெற்றோர் சம்மதிக்க வில்லை.இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி மாயமானர். பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

Advertisement

அதன்பேரில் காவல்துறைனர் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். இதற்கிடையே நேற்று பாப்பாரப்பட்டி காவல் துறையினர் மாணவியை மீட்டனர். விசாரணையில் பானிபூரி கடை நடத்திவந்த மோகன் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பாப்பாரப்பட்டி காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கை மாறுதல் செய்து 5 மாணவியை பென்னாகரம் அனைத்துமகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பென்னாகரம் மகளிர் காவல்துறையினர் மோகனை போக்சோவில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News