தண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்த குழந்தை பலி

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே தண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்த குழந்தை பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2024-05-23 17:05 GMT

பலியான சிறுமி 

தஞ்சை மாவட்டம் ,ஒரத்தநாடு அருகே உள்ள பேய்கரும்பன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மனைவி நிவேதிதா. இவர்களுடைய மகள் தீக்சிகா (வயது4) வீட்டில் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது சாப்பிடுவதற்கு கை கழுவ தீக்சிகா குளியளறைக்கு சென்றார்.

அங்கு தண்ணீர் நிரப்பப்பட்டிருந்த பெரிய பாத்திரத்தில் கை கழுவுவதற்காக கீழே குனிந்தபோது எதிர்பாராதவிதமாக அவள் நிலை தடுமாறி பாத்திரத்தில் தலை குப்புற விழுந்தாள். கை கழுவ சென்ற குழந்தை வெகு நேரமாகியும் வராத தால் மகேந்திரன் குளியலறைக்கு சென்று பார்த்த போது தீக்சிகா பாத்திரத்தில் விழுந்து தண்ணீரில் மூழ்கி கிடந்தது தெரியவந்தது.

Advertisement

இதனால் பதறிப்போன அவர் உடனடியாக குழந்தையை தூக்கி கொண்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பாநாடு காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பெண் குழந்தை பாத்திரத்துக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியானது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News