குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் குழந்தைகள்,பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.

Update: 2023-12-22 04:28 GMT

விழிப்புணர்வு முகாம் 

 புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா அறிவுறுத்தலின்படி மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் ரேவதி ஆலோசனையின்படி அகதிகள் முகாம் தோப்புக்கொல்லை பகுதியில் நடைபெற்ற குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு  முகாமிற்கு உதவி திட்ட அலுவலர் தில்லைமணி தலைமை தாங்கினார்.வருவாய் ஆய்வாளர் மணி முன்னிலை வகித்தனர்.வட்டார இயக்க மேலாளர் சகுந்தலா தேவி அனைவரையும் வரவேற்று பேசினார்.

பின்னர் தொடங்கிய விழிப்புணர்வில் பெண் குழந்தைகள் தீயவர்களிடமிருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது,பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் சட்டம் (2012), குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 2006) பற்றியும், குழந்தைகள் பாதுகாப்பு எண் 1098 பெண்கள் பாதுகாப்பு எண்கள் 181 மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிப்பதற்கான உதவி எண் 14417 பற்றியும் மற்றும் வளரிளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து பாதுகாப்பு, பெண் உரிமைகளை பாதுகாப்பது, பாலின பாகுபாட்டைக்களைப்பது, குழந்தை திருமணம் தடுத்தல், பாலியல் துன்புறுத்தல், குழந்தை தொழிலாளர் வேலைக்கு அமர்த்துதல் உள்ளிட்ட விழிப்புணர்வுகள் பற்றி விளக்கி கூறப்பட்டது.சென்றனர்.மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News