அஷ்ட பைரவர் கோவிலில் மிளகாய் யாகம்!
நாமக்கல், அஷ்ட பைரவர் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு மிளகாய் யாகம் நடக்கிறது.
Update: 2024-02-08 12:52 GMT
நாமக்கல்,அஷ்ட பைரவர் ஆலயத்தில் மிளகாய் வற்றலை தீயிட்டு கொளுத்தும் விநோத யாகம்.! -வருகிற வெள்ளிக்கிழமை தை அமாவாசை அன்று நடைப்பெறுகிறது. நாமக்கல்- மோகனூர் செல்லும் சாலையில் அணியாபுரத்தில் உள்ள அஷ்ட பைரவர் ஆலயத்தில் பிரத்தியங்கிரா தேவி சன்னதி முன்பு நிகும்பலா (மிளகாய் வற்றலை கொண்டு) யாகம் வருகிற வெள்ளிக்கிழமை (பிப்ரவரி -9) தை அமாவாசையை முன்னிட்டு அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்ற உள்ளது. யாக குண்டத்தில் பக்தர்கள் கொண்டு வரும் மிளகாய் வற்றலை போடப்பட்டு, இந்த யாகம் நடைப்பெறும். இந்த யாகத்தில் பங்கேற்பதால், பில்லி சூனியத்தில் இருந்து விடுப்படுதல், இழந்த பதவியை திரும்ப பெறுதல் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.மஹா தீபாராதனைக்கு பிறகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.