திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை திருவிழா - பக்தர்கள் தரிசனம்

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற்ற பொம்மை பூ போடும் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-04-29 08:28 GMT

 அறம் வளர்த்த நாயகியுடன் ஐயாறப்பர் திருவீதியுலா 

 தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ள பிரசித்திபெற்ற அய்யாறப்பர் கோவில் சித்தரை திருவிழா கடந்த (14) தேதி தொடங்கியது தொடர்ந்து கடந்த 22, ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெறும் சப்தஸாணம் திருவிழாவில் அறம் வளர்த்த நாயகியுடன் ஐயாறப்பர் கண்ணாடி பல்லகிலும், சுயசாம்பிகை - நந்திகேஸ்வரர் வெட்டிவேர் பல்லாக்கிலும் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் ஆறு ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது.

இதனைத் தொடர்ந்து ஏழு ஒரு பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்தது இரவு தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், கலந்து கொண்டனர். திருவிழாவில் ஏழு கிராமங்கள் இன்றி சுற்று வட்டார சேர்ந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News