திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா உற்சவம் துவங்கியது.

Update: 2024-04-17 11:33 GMT

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா உற்சவம் துவங்கியது.

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில்,10 நாட்கள் நடைபெறும் சித்திரை பெருவிழா உற்சவம், தமிழ்ப் புத்தாண்டு நாளான ஏப்., 14ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி, காலை, இரவில், சுவாமியர்அலங்கார சேவையாற்றி, வீதியுலா செல்கின்றனர். மூன்றாம் நாள் உற்சவமான நேற்று, 63 நாயன்மார்கள் கிரிவலம் சென்றனர்.

பக்தவச்சலேஸ்வரர் கோவிலில், வேதகிரீஸ் வரர், திரிபுரசுந்தரி அம்மன்,விநாயகர், முருகர், சண்டி கேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி சுவாமியர், சிறப்பு அபிஷேகத்துடன் தீபாராதனை ஏற்றனர். பின், சப்பரங்களில் 63 நாயன் மார்கள், விநாயகர், வெள்ளி அதிகார நந்திவாகனத்தில் வேதகிரீஸ்வரர், தனித்தனி வாகனங் களில் திரிபுரசுந்தரி அம்மன்உள்ளிட்ட சுவாமியர்,தேவார, திருவாசக பாடல்கள் முழக்கத்துடன், வடக்கு ராஜகோபுரம் வழியேகடந்தனர்.

வேதகிரீஸ்வரர் கோவில் குன்றின் கிரிவல பாதையில்சுவாமியர் அணிவகுக்க, நாயன்மார்கள் அவர்களை தரிசித்தவாறு, கோலாகல கிரிவலம் சென்றனர். பக்தர்களும் சென்று சுவாமியைதரிசித்து வழிபட்டனர்.பின், கோவில் அடிவாரம்,மாடவீதிகளின் வழியே மாலை கோவிலை அடைந்தனர். இரவு சுவாமி சந்திர பிரபை உற்சவம் கண்டார்.

Tags:    

Similar News