கிறிஸ்தவ கூட்டமைப்பினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பொங்கல் வாழ்த்து

தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.

Update: 2024-01-13 15:24 GMT

வாழ்த்து தெரிவித்த கிறிஸ்தவ அமைப்பினர்

தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு நிர்வாகிகள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் தேசிய தலைவர் பேராயர் டிபி. நோவா தலைமையில் தேசிய பொதுச்செயலாளர் பேராயர் கே. மேசாக் ராஜா, பொருளாளர் சாம்சன் தாசன், கோவை பேராயர் பிஷப் ரிச்சர்ட், பொள்ளாச்சி பேராயர் இஸ்ரேல் கோபி மற்றும் ஆயர்கள் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை  நேரில் சந்தித்து, புத்தகம் பரிசாக வழங்கி புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

Tags:    

Similar News