செவாலியர் அகாடமியில் கிறிஸ்துமஸ் விழா

செவாலியர் அகாடமியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்

Update: 2023-12-25 08:19 GMT

செவாலியர் அகாடமியில் கிறிஸ்துமஸ் விழா

திண்டுக்கல் செவாலியர் அகாடமியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. அருள்தந்தை ஆரோக்கிய பிரபு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கோம்பையான்பட்டி அருட்தந்தை சேசு ஆரோக்கியம், அருட் தந்தையர்கள் ஜான் பிரிட்டோ, தேவன், பாபு ஆகியோர் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் ரோஸ்லின், துணை முதல்வர் ஞானசீலா உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளி மாணவ ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இயேசு பிறப்பு மற்றும் அன்பு பகிர்வு குறித்து நாடகங்கள் நடத்தப்பட்டன.
Tags:    

Similar News