களைகட்டும் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை

ஆர்வமுடன் மக்கள் அலங்கார பொருட்களை வாங்கி சென்றனர்

Update: 2023-12-07 02:15 GMT

கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் ஸ்டார் விற்பனை களைகட்டி வருகிறது.உலகம் முழுவதும் வரும் டிச.25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.இதையொட்டி கிறிஸ்தவர்களின் வீடுகள், ஆலயம், அலுவலகம், பள்ளிகளில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்படும். மேலும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை, பலூன்களை கட்டி பறக்க விடப்படும்.மேலும் கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் ஸ்டார்களை தொங்கவிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரித்து கொண்டாடி மகிழ்வர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 20 நாட்களே உள்ளதால் திண்டுக்கல்லில் ஸ்டார் விற்பனை சூடுபிடித்துள்ளது.
Tags:    

Similar News