சீரான மின்சாரம் வழங்க பொதுமக்கள் சாலை மறியல்..!

சீரான மின்சாரம் வழங்க பொதுமக்கள் சாலை மறியல்..!

Update: 2024-06-03 07:05 GMT

போராட்டம் 

திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமாபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக அப்பகுதி வீடுகளுக்கு வழங்கப்படும் மின்மாற்றியில் இருந்து தனியார் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் மாற்றி வழங்கப்படுவதால் தங்கள் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குறைந்த மின் அழுத்த மின்சாரம் வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் வீடுகளில் உள்ள ஏசி, பிரிட்ஜ், மின்விசிறி,டிவி,வாஷிங் மெஷின் உள்ளிட்டவை பழுதடைவதாக குற்றம் சாட்டியதுடன் குறைந்த மின்னழுத்தம் காரணமாக தண்ணீர் சரிவர வராமல் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதோடு குழந்தைகள் முதல் முதியவர்கள் கர்ப்பிணி பெண்கள் பெரிதும் சிரமப்படுவதாகவும் கூறியுள்ளனர். இதுகுறித்து காக்களூர் மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தங்கள் பகுதியைச் சுற்றி காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளதால் தங்கள் பகுதியில் சாலையின் குறுக்கே உயர் அழுத்த மின் ஒயர்கள் கைக்கு எட்டும் தூரத்திலேயே இருப்பதாகவும் அடிக்கடி அறுந்து விடுவதால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், தங்கள் பகுதிக்கு உடனடியாக முறையான மின்சாரம் வழங்க வேண்டும், சாலையில் கைக்கு எட்டும் குறைந்த உயரத்தில் உள்ள மின் ஒயர்களை சீரமைக்க வேண்டும் என கூறி சிட்கோ தொழிற்பேட்டை சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்களை சமாதானம் செய்ய முடியாமல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த சாலை மறியல் ஆர்ப்பாட்டமானது. பெரிய போராட்டமாக தொடர்ந்த நிலையில் மின்வாரிய உயர் அதிகாரிகள் திருவள்ளூர் தாலுகா காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News